Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமிலும் இணைந்த ரஜினி

07 மார், 2018 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Rajini-joints-in-FB-and-Instragram

இன்றைக்கு சமூக வலைதளங்கள் உலகையே ஆட்டுவிக்கின்றன. அரசியல் தொடங்கி சினிமா வரை எல்லாமே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டிராகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தான் வைரலாகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2014-ம் ஆண்டு டுவிட்டர் தளத்திற்கு வந்தார். இவரை 4.58 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். ஆரம்பத்தில் அவ்வளவாக டுவிட்டரில் ஆர்வம் காட்டாத ரஜினி, தன் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு பின்னர் கொஞ்சம் ஈடுபாடு காட்ட துவங்கி உள்ளார்.

இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டிராகிராமிலும் ரஜினி இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் முதல் பதிவாக வணக்கம் என பதிவிட்டுள்ளார். ரஜினியை 1.50 லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அதேப்போன்று இன்ஸ்டிராகிராமில் வணக்கம், வந்துட்டேன்னு சொல்லு என்று தன்னுடைய முதல் பதிவை இட்டுள்ளார். தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் களத்தில் இறங்கியுள்ள ரஜினி, இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டிராகிராமில் இணைந்திருப்பதாக தெரிகிறது.

ரஜினியின் பேஸ்புக் தளம் லிங்க் : https://www.facebook.com/Rajinikanth/

ரஜினியின் இன்ஸ்டிராகிராம் தளம் லிங்க் : https://www.instagram.com/rajinikanth/

Advertisement
கவரிமான் பரம்பரையில் விஷ்ணு விஷால்கவரிமான் பரம்பரையில் விஷ்ணு விஷால் 102 வயது முதியவராக கலக்கும் அமிதாப்பச்சன் படம் மே 4-ல் ரிலீஸ் 102 வயது முதியவராக கலக்கும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்
Tamil New Film Kadaikutty Singam
Tamil New Film natpuna enanu thaeriuma

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in