சஞ்சய் தத்துக்கு உயில் எழுதிய ரசிகை | நிவின்பாலியும் கால்பந்து வீரர் ஆகிறாரா..? | சொந்தக் கட்சியிலேயே ராஜினாமா செய்த உபேந்திரா | 4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி |
வழக்கமான கதாநாயகியாக நடித்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் புரட்சி பெண்ணாக நடித்தார். அதன்பிறகுதான் தமன்னாவுக்குள் ஒரு ஆக்சன் நாயகி இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில்,
பாகுபலி படத்திற்கு முன்பு நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் எனது பர்பாமென்ஸ் பேசப்படவில்லை. ஆனால் பாகுபலியில் நடித்த அவந்திகா என்ற புரட்சி பெண் வேடம் தான் என்னை பேச வைத்தது. பல திரையுலக கலைஞர்களும் எனக்கு போன் செய்து எனது பர்பாமென்ஸ் குறித்து பெருமையாக பேசினார்கள்.
சமீபகாலமாக ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் வலுவான கதைகளை எழுதி வருகிறார்கள். அப்படி கதாநாயகிகளை முன்வைத்து எடுக்கப்படும் படங்களும் வெற்றி பெற்று வருவதால், இன்றைக்கு நடிகைகளும், நடிகர்களுக்கு இணையாக கமர்சியல் ரீதியாக உயர்ந்து நிற்க முடிகிறது என்கிறார் தமன்னா.