4 கோடி பார்வைகளைத் தாண்டிய 'சொடக்கு' | ரஜினிகாந்தை முந்திய மகேஷ் பாபு | தமிழ்நாட்டில் மட்டும் தொடரும் ஸ்டிரைக் | கரு குழந்தையை வளர்ப்பு மகளாக்க ஆசைப்பட்ட சாய்பல்லவி! | தமன்னாவின் கேரியரை மாற்றிய படம் | ரஜினிக்கு தேவை 2 கோடி உறுப்பினர்கள் | விசுவாசம் குறித்து பரவிய வதந்தி | பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமிலும் இணைந்த ரஜினி | 102 வயது முதியவராக கலக்கும் அமிதாப்பச்சன் படம் மே 4-ல் ரிலீஸ் | கவரிமான் பரம்பரையில் விஷ்ணு விஷால் |
கதாநாயகன் படத்தின் படு தோல்வியினால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த விஷ்ணு விஷால், இனி சொந்தப்படமே தயாரிக்க வேண்டாம் என்கிற அளவுக்கு நொந்துபோனார். பின்னர் மெல்ல மனதை தேற்றிக்கொண்டு 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' முதலான படங்களில் நடித்து வருகிறார்.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்துள்ள படம் - 'ஜெகஜால கில்லாடி'. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் கதாநாயகியாக நிவேதா பெதுராஜ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடுமாம். இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் வெங்கட் ராதாகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷ்ணு விஷால்!
இந்தப் படத்திற்கு 'கவரிமான் பரம்பரை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இன்ன பிற விவரங்களுடன் 'கவரிமான் பரம்பரை' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.