கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் வெளியீடு | அர்ஜூன் ரெட்டி ஹீரோவின் முதல் தமிழ் படம் துவங்கியது | பிரபுதேவா இயக்கத்தில் அஜித் : கிட்டத்தட்ட உறுதியானது | சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ்ஷா | 'காலா' - டப்பிங் பேசி முடித்த நானா படேகர் | ஆச்சர்யப்படுத்திய சிம்பு | டிஜிட்டலில் ஆர்வம் காட்டும் ரகுல் பிரீத் சிங் | தியேட்டருக்கு முன்பே டிவியில் ரிலீஸான ஜோதிகா படம் | 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மம்தா மோகன்தாஸ் | 5வது முறையாக ஜோடி சேரும் மம்முட்டி - நயன்தாரா |
இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ், இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர், ஆனந்தி நடித்துள்ளனர். படத்தில் இடம்பெறும் கருப்பி என்ற பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ராம், "என் மாணவன் இயக்கி உள்ள பரியேறும் பெருமாள் படம், அவன் மனதில் இருந்த வெறி" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகி, முன்னணி வார இதழில் வெளியான மறக்கவே முடியாத தொடர் “மறக்கவே நினைக்கிறேன்” மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம்.
இதை என் மாணவனின் முதல் கோபம் என்று கூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல், வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம், இது எல்லாவற்றின் மொத்த வெளிப்பாடாக இந்தப் பாட்டும், படமும் இருக்கும். “பரியேறும் பெருமாள்” கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன், அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கார்.
பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு. தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும், அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும், நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இவ்வாறு ராம் கூறியிருக்கிறார்.