நேர்மையானவர்களுக்கு கட்சியில் இடம் : கமல் | அரிய வகை நோயால் இர்பான் கான் பாதிப்பு | கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் வெளியீடு | அர்ஜூன் ரெட்டி ஹீரோவின் முதல் தமிழ் படம் துவங்கியது | பிரபுதேவா இயக்கத்தில் அஜித் : கிட்டத்தட்ட உறுதியானது | சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ்ஷா | 'காலா' - டப்பிங் பேசி முடித்த நானா படேகர் | ஆச்சர்யப்படுத்திய சிம்பு | டிஜிட்டலில் ஆர்வம் காட்டும் ரகுல் பிரீத் சிங் | தியேட்டருக்கு முன்பே டிவியில் ரிலீஸான ஜோதிகா படம் |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப்படம் தான், தற்போது பாலா இயக்கத்தில், விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, வர்மா என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது.
அர்ஜூன் ரெட்டி மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள்.
அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு, சாந்தா ரவி கே.சந்திரன், ஒளிப்பதிவு செய்ய, விக்ரம் வேதா புகழ் சிஎஸ்.சாம் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விரைவில் பர்ஸ்ட் லுக்குடன் கூடிய தலைப்பு வெளியாக உள்ளது.