அகர்தலா : 'மாநில அரசில் மரியாதையுடன் நடத்தப்படாவிட்டால், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம்' என, திரிபுரா சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, ஐ.பி.எப்.டி., எனப்படும், திரிபுரா மலைவாழ் மக்கள் முன்னணி கட்சி கூறியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐ.பி.எப்.டி., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தமுள்ள, 60 தொகுதிகளில், தேர்தல் நடந்த, 59 தொகுதிகளில், பா.ஜ., 35 தொகுதி களிலும், அதன் கூட்டணி
பா.ஜ., கூட்டணி, 43 இடங்களில் வென்றது. 25 ஆண்டுகளாக ஆட்சி செய்த, மார்க்.கம்யூ., 16 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
கட்சியான, ஐ.பி.எப்.டி., எட்டு தொகுதிகளிலும் வென்றன. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று நடக்க உள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எப்.டி., தலைவர், என்.சி.தேப்பர்மா, நேற்று கூறியதாவது:மார்க்.கம்யூ., ஆட்சியை அகற்ற வேண்டும் என, பா.ஜ.,வுடன் இணைந்து கூட்டணி அமைத்தோம். அதில், வெற்றியும் பெற்றுள்ளோம். பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால், மாநில அரசில், எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என, பரவலாக பேசப்படுகிறது.
தகுந்த மரியாதை கிடைக்காவிட்டால், அரசுக்கு, வெளியில் இருந்து மட்டும் ஆதரவு தருவோம். எங்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி இடம் ஒதுக்க கோருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பதவியேற்பதற்கு முன்பே, கூட்டணி கட்சி நிபந்தனை விதித்து உள்ளதால், பா.ஜ., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து