6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மம்தா மோகன்தாஸ் | 5வது முறையாக ஜோடி சேரும் மம்முட்டி - நயன்தாரா | மம்முட்டியின் 'கேரக்டர்'களை கவனித்தீர்களா..? | விஞ்ஞானியாக பிருத்விராஜ் நடிக்கும் 'நைன்' | காலாவிற்கு பிறகு சமுத்திரகனியின் ஆண்தேவதை | விக்ரம் மகனையும் விட்டு வைக்காத பாலா | 2.O டீசர் லீக் : சட்ட நடவடிக்கையில் இறங்கும் லைகா! | விழாவுக்கு பைக்கில் வந்த சாய் பல்லவி | ஜிஎஸ்டி-யால் காணாமல் போகும் தமிழ் தலைப்புகள் | அல்லு அர்ஜுன் தமிழ்ப் படம் டிராப்? |
ரஜினியை போலவே அஜித்தும் தனது தோற்ற இமேஜ் பற்றி கவலைப்படாதவர். தமிழ் சினிமாவில் முதன் முறையாக 10 நாள் தாடியுடன் நடித்தது அஜித்தான். அதன்பிறகு அதுவே பேஷன் ஆனது. இப்போதெல்லாம் மொழு மொழு முகத்துடன் யாரும் நடிப்பதில்லை. அஜித் சமீபத்தில் நடித்த படங்களில் சால்ட் அண் பெப்பர் லுக்கில் நடுத்தர வயதுக்காரராகவே நடித்தார். நிஜ வாழ்க்கையிலும் அப்படியான தோற்றத்தில் தான் வலம் வந்தார்.
இந்த நிலையில் நேற்று அஜித்தின் ரசிகர் ஒருவர் அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அவர் ஒரு ஓட்டல் ஊழியர் என்பது அவரது உடையில் தெரிகிறது. அஜித்தும், ஷாஷினியும் அருகில் நிற்கிறார்கள். அஜித் சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறி தலைமுடி, தாடி, மீசை எல்லாமே நரைமுடியுடன் இருக்க, கிட்டத்தட்ட ஒரு முதியவர் தோற்றத்தை கொண்டிருக்கிறார். கண்ணாடியும், கண்ணுக்கு கீழுள்ள சதை மடிப்புகளும் அவரை இன்னும் வயதானவராக காட்டுகிறது. இந்த படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.