'காலா' - டப்பிங் பேசி முடித்த நானா படேகர் | ஆச்சர்யப்படுத்திய சிம்பு | டிஜிட்டலில் ஆர்வம் காட்டும் ரகுல் பிரீத் சிங் | தியேட்டருக்கு முன்பே டிவியில் ரிலீஸான ஜோதிகா படம் | 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மம்தா மோகன்தாஸ் | 5வது முறையாக ஜோடி சேரும் மம்முட்டி - நயன்தாரா | மம்முட்டியின் 'கேரக்டர்'களை கவனித்தீர்களா..? | விஞ்ஞானியாக பிருத்விராஜ் நடிக்கும் 'நைன்' | காலாவிற்கு பிறகு சமுத்திரகனியின் ஆண்தேவதை | விக்ரம் மகனையும் விட்டு வைக்காத பாலா |
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்த '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தை இயக்கியவர் ஜென்யூஸ் முகமது. இதை தொடர்ந்து அடுத்த படம் எதுவும் இயக்காமல் இருந்த இவர், விஞ்ஞானத்தின் பின்புலத்தில் 'நைன்' என்கிற ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம்.
ஒன்பது நாட்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை பிருத்விராஜிடம் சொல்ல அவருக்கு கதையும் தனது விஞ்ஞானி கேரக்டரும் ரொம்பவே பிடித்து போனதாம். இதனால் படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதித்ததுடன் படத்தையும் தானே தயாரிப்பதாக சொல்லிவிட்டாராம்.
சில மாதங்களுக்கு முன்பு, தான் பங்குதாரராக இருந்த ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்துவிட்ட பிருத்விராஜ், தற்போது தனியாக துவங்கியுள்ள நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்தப்படம் இருக்குமாம். இதில் கதாநாயகிகளாக நித்யா மேனன் மற்றும் பார்வதி ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.