சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ்ஷா | 'காலா' - டப்பிங் பேசி முடித்த நானா படேகர் | ஆச்சர்யப்படுத்திய சிம்பு | டிஜிட்டலில் ஆர்வம் காட்டும் ரகுல் பிரீத் சிங் | தியேட்டருக்கு முன்பே டிவியில் ரிலீஸான ஜோதிகா படம் | 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மம்தா மோகன்தாஸ் | 5வது முறையாக ஜோடி சேரும் மம்முட்டி - நயன்தாரா | மம்முட்டியின் 'கேரக்டர்'களை கவனித்தீர்களா..? | விஞ்ஞானியாக பிருத்விராஜ் நடிக்கும் 'நைன்' | காலாவிற்கு பிறகு சமுத்திரகனியின் ஆண்தேவதை |
கடந்த இரண்டு ஆண்டுகளில் மம்முட்டி நடிப்பில் 9 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் இரண்டு படங்களை தவிர மற்ற படங்களில் எல்லாம் கிருஸ்தவராகவே நடித்துள்ளார் மம்முட்டி. தவிர அடுத்து வெளியாகும் இரண்டு படங்களில் கூட அவர் கிருஸ்தவராகவே நடித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதிலும், குறிப்பாக அவர் போலீஸ் கேரக்டர்களில் நடிக்கும் படங்களில் ராஜன் சச்சாரியா (கசபா), எட்வர்ட் லிவிங்ஸ்டன் (மாஸ்டர்பீஸ்), ஜேம்ஸ் ஆப்ரஹாம் (ஸ்ட்ரீட்லைட்ஸ்), அடுத்து வெளியாக இருக்கும் (ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்) படத்தில் டெரிக் ஆபிரஹாம் என கிருஸ்துவ பெயர்களிலேயே நடிக்கிறார்.
அதேசமயம் ரிலீஸான அந்த 7 படங்களில் தோப்பில் ஜோப்பன் படத்தை தவிர வேறு எந்த படத்திலும் அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை பெயர் தவிர, எந்த ஒரு காட்சியிலும் மத ரீதியாக அடையாளப்படுத்தி கொள்ளவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை கிருஸ்துவ பெயர்கள் இருந்தால் வெற்றி என சென்டிமென்ட்டாக விரும்புகிறாரோ என்னவோ..?