வாடகை தாய் மூலம் சன்னி லியோனுக்கு இரட்டை ஆண் குழந்தை | மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகு போல் மூழ்கும் : கமல் | விஜய் 62 லேட்டஸ்ட் அப்டேட் | சேகுவேரா சூர்யா? | ராஜமவுலி படத்தில் சமந்தா? | விஜய் படத்தில் நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி? | 2.O : புதிய டீஸரை தயார் செய்யும் ஷங்கர் | டி.இமானின் இரண்டாவது கன்னடப் படம் | வில்லன் இல்லை, தம்பி... புதிய தகவல்...! | இரும்புத்திரைக்காக விஷாலின் கேரள பயணம் |
'விவேகம்' படத்திற்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கவிருக்கும் படம் 'விஸ்வாசம்'. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடமே அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாக காலதாமதம் ஆனதால் படம் பற்றி அடிக்கடி ஏதாவது வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சிலர் வேண்டுமென்றே அப்படியான வதந்திகளைப் பரப்பிவிடுகிறார்கள். நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் திடீரென 'விஸ்வாசம்' படம் கைவிடப்பட்டதாக சிலர் தகவல்களைப் பரப்பினார்கள். படத்திற்காக சிவா உருவாக்கிய கதை பிடிக்கவில்லை என படத் தயாரிப்பாளர் கூறியதாகவும், அதனால், 'விஸ்வாசம்' படத் தயாரிப்பிலிருந்து அவர்கள் விலகியதாகவும் சிலர் பதிவிட ஆரம்பித்தார்கள்.
இமான் இசை, நயன்தாரா நாயகி என கடந்த சில நாட்களில் தான் அறிவிப்புகளைச் செய்தார்கள். நயன்தாரா கதை கேட்காமல் எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்க மாட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஐதராபாத்தில் நடந்து வருவதாகவும் வரும் 23ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.