டாஸ்மாக்குக்கு நான் ஆதரவில்லை: கமல் | தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை: ரஜினி | தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை: ரஜினி | வாடகை தாய் மூலம் சன்னி லியோனுக்கு இரட்டை ஆண் குழந்தை | மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகு போல் மூழ்கும் : கமல் | விஜய் 62 லேட்டஸ்ட் அப்டேட் | சேகுவேரா சூர்யா? | ராஜமவுலி படத்தில் சமந்தா? | விஜய் படத்தில் நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி? | 2.O : புதிய டீஸரை தயார் செய்யும் ஷங்கர் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. பின்னர் கோல்கட்டாவிலும் சில நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து இப்போது மீண்டும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் விஜய்62 படத்தின் படப்பிடிப்பு சில தினங்களாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்த படத்தில் ராதாரவி மற்றும் பிரபல அரசியல்வாதியான பழ கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் சண்டை காட்சிகளை தெலுங்கில் பிரபலமாக விளங்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களான ராம் - லக்ஷமன் என்ற இரட்டையர்கள் அமைத்து வருகிறார்கள்.