ராஜமவுலி படத்தில் சமந்தா? | விஜய் படத்தில் நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி? | 2.O : புதிய டீஸரை தயார் செய்யும் ஷங்கர் | டி.இமானின் இரண்டாவது கன்னடப் படம் | வில்லன் இல்லை, தம்பி... புதிய தகவல்...! | இரும்புத்திரைக்காக விஷாலின் கேரள பயணம் | 50 நாளை கடந்த தானா சேர்ந்த கூட்டம் | அடுத்தடுத்து 2 டீசர் லீக், அதிர்ச்சியில் ரஜினி குடும்பம் | 'விஸ்வாசம்' மார்ச் 23 ஆரம்பம்? | ஸ்ரீதேவிக்கு ஜெயப்பிரதா புகழாரம் |
ரஜினி நடித்துள்ள 'காலா' படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகவிருக்கும் நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் சில தினங்களுக்கு முன் வெளியானது.
தொடர்ந்து அப்படம் குறித்து புதிய புதிய தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ், ரஜினி, அனிருத் ஆகிய மூவரும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது!
இதற்கிடையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பீட்சா, 'இறைவி' படங்களில் நடித்துள்ளதால் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவில்லை என்றும், ரஜினியின் தம்பியாக நடிக்கிறார் என்றும் புதிய தகவல் பரவத்தொடங்கியுள்ளது.
எது உண்மை? சம்மந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக சொல்லும் வரை எல்லாமே செய்திதான்.