டாஸ்மாக்குக்கு நான் ஆதரவில்லை: கமல் | தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை: ரஜினி | தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை: ரஜினி | வாடகை தாய் மூலம் சன்னி லியோனுக்கு இரட்டை ஆண் குழந்தை | மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகு போல் மூழ்கும் : கமல் | விஜய் 62 லேட்டஸ்ட் அப்டேட் | சேகுவேரா சூர்யா? | ராஜமவுலி படத்தில் சமந்தா? | விஜய் படத்தில் நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி? | 2.O : புதிய டீஸரை தயார் செய்யும் ஷங்கர் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யாவின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல்பரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்கள். மார்ச்-5, இயக்குநர் செல்வராகவன் பிறந்த நாள் என்பதால் சூர்யா-36 படத்தின் பரஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக, இதில் படத்திற்கு வித்தியாசமாக NGK என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. NGK என்பதன் பொருள் என்ன என்பது குறித்த எந்த அறிவிப்பும் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெறவில்லை. சூர்யா, பார்ப்பதற்கு போராளியான சேகுவேரா போன்று உள்ளார்.
இதற்கு முன் சூர்யா நடித்த படங்களுக்கு அயன் ஆறு, 24 என்றெல்லாம் வித்தியாசமான டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது அதேபாணியில் NGK என்று வித்தியாசமான டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.