2.ஓ டீசர் லீக் : ரஜினி மகள் கோபம் | சாய்பல்லவியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட டைரக்டர் விஜய் | வடசென்னை மூன்று வருட கடின உழைப்பு -தனுஷ் | ஜோதிகா படத்தில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு | மணிரத்னம் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுகாசினி | மீண்டும் யூத்தாக மாறும் பார்த்திபன் | இந்திக்கு செல்கிறார் அமலாபால் | 2.ஓ பட டீசரும் லீக்கானது | டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தல் : ராதாரவி மீண்டும் வெற்றி | தொண்டு நிறுவனம் தொடங்கினார் அமலாபால் |
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள 2.ஓ திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. வெளியான 2.ஓ திரைப்பட டீசர் அதிகாரப்பூர்வ டீசரா என்பது குறித்து எந்தவித உறுதியான தகவலும் இல்லை.
2.ஓ பட டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் காலா படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட நேத்திற்கு முன்பே, அவசர அவசரமாக நடுராத்திரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் காலா டீசரை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் வெளியிட்டார்.
1.27 நிமிடங்கள் ஓடும் 2.0 படத்தின் டீசரில் அனைவரின் மொபைல் போன்களும் திடீரென பறப்பது போன்றும், டீசர் முடிவில் ரஜினி கண்ணாடியை உயர்த்தி குக்கூ என கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
லண்டனில் லைகா டெலிகாம் நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சிலருக்கு இந்த டீசர், எல்இடி திரை மூலம் போட்டு காண்பிக்கும் போது யாரோ ஒருவர் இதை மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் லீக் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீசர், தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு பிரத்யேகமாக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.