ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் : மனம் திறந்த போனி கபூர் | 2.ஓ டீசர் லீக் : ரஜினி மகள் கோபம் | சாய்பல்லவியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட டைரக்டர் விஜய் | வடசென்னை மூன்று வருட கடின உழைப்பு -தனுஷ் | ஜோதிகா படத்தில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு | மணிரத்னம் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுகாசினி | மீண்டும் யூத்தாக மாறும் பார்த்திபன் | இந்திக்கு செல்கிறார் அமலாபால் | 2.ஓ பட டீசரும் லீக்கானது | டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தல் : ராதாரவி மீண்டும் வெற்றி |
சமீப காலமாக ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது விஸ்வ ரூபம்-2, சாமி-2, சண்டக்கோழி-2, மாரி-2, விண்ணைத்தாண்டி வருவாயா-2, புலிகேசி-2, இந்தியன்-2 என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், பார்த்திபனும் 1993ல் தான் இயக்கி நடித்த உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் இயக்கி நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனியை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் பார்த்திபன், மீண்டும் தான் ஹீரோவாக நடிப்பதால், கடந்த சில மாதங்களாக கடின உடற்பயற்சி செய்து 15கிலோ வெயிட் குறைத்து தற்போது ஸ்லிம்மாக காணப்படுகிறார். அதோடு, தனது ஹேர் ஸ்டைலையும் ஸ்டைலிசாக மாற்றி இந்த படத்தில் மீண்டும் தன்னை யூத்தாகவே வெளிப்படுத்தப் போகிறாராம் பார்த்திபன்.