வாஷிங்டன் : வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, அமெரிக்காவில் உள்ளதை உறுதிப்படுத்த முடியவில்லை என, அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, வைர வியாபாரி, நிரவ் மோடி, அவருடைய உறவினர், மெஹுல் சோக்சி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் சோக்சி, அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு தப்பிச் சென்றதாக, செய்திகள் வெளியாகின.
இது குறித்து, அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளரிடம் கேட்ட போது, 'நிரவ் மோடி மற்றும் குடும்பத்தார், நியூயார்க் நகரில் தலைமறைவாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை உறுதி செய்ய முடியவில்லை' என்றார்.
'அவர்களை கண்டுபிடிக்க, மத்திய அரசிடம் இருந்து கோரிக்கை ஏதும் வந்ததா?' என்ற கேள்விக்கு, 'இது தொடர்பாக, சட்டத் துறையை தான் கேட்க வேண்டும்' என, அவர் பதிலளித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (14+ 47)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply