டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தல் : ராதாரவி மீண்டும் வெற்றி | தொண்டு நிறுவனம் தொடங்கினார் அமலாபால் | கேரள முதல்வரிடம் கமல் உடல் நலம் விசாரிப்பு | மார்ச் 8-ல் வட சென்னை பர்ஸ்ட் லுக் | மீண்டும் வருகிறார் கொக்கி குமார் | நாச்சியார் ரீ-மேக்கில் அனுஷ்கா | மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய மடோனா | 35 நாட்களில் 3௦ கோடி வசூல் ; அதிரவைத்த 'ஆதி' | 'காளியன்' படத்தில் 'கேம் ஆப் த்ரோன்' குழுவினர்..! | ரிலீஸுக்கு முன்பே சேனலில் விலைபோகும் மம்முட்டி படங்கள் |
ஆடுகளம் டாப்சிக்கு தமிழில் சுத்தமாக படங்கள் இல்லை என்றபோதும் பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஆனந்தோ பிரம்மா படத்தில் நடித்தவர் தற்போது ஆதியுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
சர்வதேச பேட்மிண்டன் வீரர் ஒருவரை டாப்சி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் டாப்சியிடம் மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, கடும் கோபமாகி விட்டாராம்.
சினிமா நட்சத்திரங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான கிசுகிசுக்களை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. இந்த மாதிரி தவறான செய்தி பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி கேள்வி கேட்பதே தவறு. அதனால் சினிமா சம்பந்தமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் டாப்சி.