ஸ்ரீதேவியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை : ராம் கோபால் வர்மா | குடும்பத்துக்குள்ளேயே நடிக்கும் சூர்யா, கார்த்தி | வித்யாசாகருக்கு வாழ்த்து சொன்ன அஷ்வின் ரவிச்சந்திரன் | வாணி ஜெயராமுக்கு சக்தி விருது | கார்த்தியும், கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைகிறார்கள் | கட்சிக்கு பெண்களை திரட்டும் கமல் | ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைப்பு | 24 மணி நேரமாகியும் மெர்சல்-ஐ நெருங்க முடியாத காலா | மோகன்லாலின் 'நீராளி' டிரைலர் மார்ச்-7ல் வெளியீடு | கேரளாவில் இன்று தியேட்டர்கள் வேலைநிறுத்தம்..! |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உண்மையான ரசிகர்கள் பலர் இருந்தாலும், யாருமே இயக்குனர் ராம் கோபால் வர்மாவை மிஞ்ச முடியாது. ஸ்ரீதேவி மறைந்த அந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து அவரைப் பற்றி டுவீட்டுகளைப் பதிவிட்டார் ராம் கோபால் வர்மா. அது மட்டுமல்ல இரண்டு கடிதங்களை உணர்வு பூர்வமாக எழுதி, ஸ்ரீதேவி மேல் அவருக்கிருந்த அபிமானத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.
கடந்த இரண்டு நாட்களாகவே ஸ்ரீதேவியின் சுயசரிதையை ராம்கோபால் வர்மா திரைப்படமாக எடுக்கப் போகிறார் என சில தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை மறுத்து மீண்டும் ஸ்ரீதேவி பற்றி ஒரு அழுத்தமான பதிவை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
அதில், “ஸ்ரீதேவியின் சுயசரிதையை நான் படமாக உருவாக்கப் போகிறேன் என சில மீடியாக்கள் சொல்வதில் உண்மை இல்லை. அது முட்டாள்தனமானது என நான் நினைக்கிறேன். மேலும், ஸ்ரீதேவி போல் நடிக்க இங்கு யாருக்குமே தகுதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா மனதில் ஸ்ரீதேவி எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.