மணிரத்னம் படத்தில் இரண்டு மெகா வில்லன்கள் | கீர்த்தி சுரேஷை கவர்ந்த ஸ்டைலிஷ் விஜய் | தனுஷ், அனிருத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | ராம்சரணுடன் மோதும் விவேக் ஓபராய் | கோலிவுட்டின் விதியையே மாற்றிய ஈஸ்வரி ராவ் | திருமணம் கேள்வி : டாப்சி கோபம் | அண்ணன் - தம்பி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு ராசி | நாயகி இல்லாமல் ஆரம்பமான பாலா படம் | தமிழக மக்களுக்கு துரோகம் : கமல் | ஸ்ரீதேவியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை : ராம் கோபால் வர்மா |
விஜய்யுடன் பைரவா படத்தில் ஜோடி சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த படம் தன்னை முதல்தர நாயகியாக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் கீர்த்தி சுரேஷின் நம்பிக்கை பொய்த்தது.
இருப்பினும் மீண்டும் தற்போது விஜய்யுடன் அவரது 62வது படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களுக்கு இணையாக சமூக நோக்கமுள்ள கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்யின் தோற்றம் இதுவரையில்லாத அளவுக்கு பக்கா ஸ்டைலிஷாக இருப்பதாக கூறுகிறார் கீர்த்தி சுரேஷ். கோட்டு சூட் கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து அவர் நடித்துள்ள சில காட்சிகள் படு மாஸாக உள்ளது. இந்த படத்திலும் மெர்சலைப்போன்று லேசாக தாடி வைத்திருக்கிறார் விஜய். அந்தவகையில், விஜய் 62 வது படம் அவரது ரசிகர்கள் அதிகமாக கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.