நாச்சியார் ரீ-மேக்கில் அனுஷ்கா | மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய மடோனா | 35 நாட்களில் 3௦ கோடி வசூல் ; அதிரவைத்த 'ஆதி' | 'காளியன்' படத்தில் 'கேம் ஆப் த்ரோன்' குழுவினர்..! | ரிலீஸுக்கு முன்பே சேனலில் விலைபோகும் மம்முட்டி படங்கள் | தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் கூட்டம் | மணிரத்னம் படத்தில் இரண்டு மெகா வில்லன்கள் | கீர்த்தி சுரேஷை கவர்ந்த ஸ்டைலிஷ் விஜய் | தனுஷ், அனிருத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | ராம்சரணுடன் மோதும் விவேக் ஓபராய் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய். அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் தெலுங்கில் போயபதி இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் பவர்புல் வில்லனாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை விவேக் ஓபராயை வைத்து தான் தொடங்கியிருக்கிறார் போயபதி. முதல் காட்சியில் விவேக் ஓபராய், நாயகியை ராக்கிங் செய்வது போன்று படமாக்கியுள்ளார். அந்த காட்சியை விஜய வாடாவில் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்து பிரமாண்டமாக படமாக்கியுள்ளார்.
இந்த படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராய்க்கு பல ஹைலைட்டான காட்சிகள் உள்ளதாம். மார்ச் 8-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் ராம் சரணும் கலந்து கொள்கிறார்.