தனுஷ், அனிருத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | ராம்சரணுடன் மோதும் விவேக் ஓபராய் | கோலிவுட்டின் விதியையே மாற்றிய ஈஸ்வரி ராவ் | திருமணம் கேள்வி : டாப்சி கோபம் | அண்ணன் - தம்பி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு ராசி | நாயகி இல்லாமல் ஆரம்பமான பாலா படம் | தமிழக மக்களுக்கு துரோகம் : கமல் | ஸ்ரீதேவியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை : ராம் கோபால் வர்மா | குடும்பத்துக்குள்ளேயே நடிக்கும் சூர்யா, கார்த்தி | வித்யாசாகருக்கு வாழ்த்து சொன்ன அஷ்வின் ரவிச்சந்திரன் |
நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அதன்பிறகு அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் தான் நடிக்க முடியும் என்று சினிமா உலகில் இருந்து வந்த நிலை சமீபகாலமாக படிப்படியாக மாறிக்கொண்டு வருகிறது. திருமணமான சில நடிகைகள் மீண்டும் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஏற்கனவே நடித்த முன்னணி நடிகர்களுடன் மீண்டும் டூயட் பாடும் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் அந்த நிலையை தற்போது காலா படத்தின் மூலம் மாற்றியிருக்கிறார் ஈஸ்வரி ராவ். இந்த படத்தில் ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார்.
தனது 16 வயதில் தெலுங்கில் அறிமுகமான ஈஸ்வரிராவ், பின்னர் விஜய் நடித்த நாளை தீர்ப்பு தொடங்கி சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். அதன்பிறகு விக்னேஷ் நடித்த ராமன் அல்துல்லா, பிரகாஷ்ராஜ் நடித்த குருபார்வை உள்பட சில படங்களில் நாயகியாகவும் நடித்தார். பின்னர் அப்பு, தவசி, சுள்ளான், விரும்புகிறேன் என பல படங்களில் கேரக்டர்களில் நடித்தவர் அதையடுத்து திருமணமாகி செட்டிலாகி விட்டார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த ஈஸ்வரிராவை, மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் பா.ரஞ்சித். அதுவும் ஈஸ்வரி ராவ் கனவில் கூட நினைத்து பார்க்காத வகையில், ரஜினிக்கு ஜோடியாகி, சினிமா உலகின் விதியையே காலா படம் மூலம் மாற்றி எழுதி விட்டார் பா.ரஞ்சித்.
இந்த படத்தில் திருநெல்வேலியைச்சேர்ந்த குடும்பப் பெண்ணாக மிக அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஈஸ்வரிராவ். காலா டீசரில் ரஜினிக்கு பிறகு கவனிக்கப்படும் இன்னொரு கேரக்டராக தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஈஸ்வரிராவ்.
ஆக, திரையுலகில் முதல் ரவுண்டில் புகழ் பெறாத நடிகையாக திகழ்ந்த ஈஸ்வரிராவ், இந்த இரண்டாவது ரவுண்டில் காலா படம் திரைக்கு வருவதற்கு முன்பே, யார் அந்த ஈஸ்வரிராவ் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நடிகையாகியிருக்கிறார்.