மணிரத்னம் படத்தில் இரண்டு மெகா வில்லன்கள் | கீர்த்தி சுரேஷை கவர்ந்த ஸ்டைலிஷ் விஜய் | தனுஷ், அனிருத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | ராம்சரணுடன் மோதும் விவேக் ஓபராய் | கோலிவுட்டின் விதியையே மாற்றிய ஈஸ்வரி ராவ் | திருமணம் கேள்வி : டாப்சி கோபம் | அண்ணன் - தம்பி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு ராசி | நாயகி இல்லாமல் ஆரம்பமான பாலா படம் | தமிழக மக்களுக்கு துரோகம் : கமல் | ஸ்ரீதேவியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை : ராம் கோபால் வர்மா |
மணிரத்னம் இயக்கி வரும் மல்டி ஹீரோ படம் செக்கச் சிவந்த வானம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். லைகா தயாரிக்கும் இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கிக்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசும் இந்த படத்தில் சிம்பு ஒரு இஞ்சினியர் வேடத்திலும், விஜய் சேதுபதி போலீசாகவும் நடிக்க, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகிய இருவரும் அதிரடி வில்லன்களாக நடிக்கிறார்கள்.
தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டிய நிலையில், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். அவர்கள் இருவரையும் தனது படத்தில் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு அதிரடியான வில்லன்களாக நடிக்க வைக்கிறாராம் மணிரத்னம்.