மீண்டும் வருகிறார் கொக்கி குமார் | நாச்சியார் ரீ-மேக்கில் அனுஷ்கா | மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய மடோனா | 35 நாட்களில் 3௦ கோடி வசூல் ; அதிரவைத்த 'ஆதி' | 'காளியன்' படத்தில் 'கேம் ஆப் த்ரோன்' குழுவினர்..! | ரிலீஸுக்கு முன்பே சேனலில் விலைபோகும் மம்முட்டி படங்கள் | தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் கூட்டம் | மணிரத்னம் படத்தில் இரண்டு மெகா வில்லன்கள் | கீர்த்தி சுரேஷை கவர்ந்த ஸ்டைலிஷ் விஜய் | தனுஷ், அனிருத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன் |
காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகம் - கர்நாடகம் இடையே ஆண்டுக்கணக்காக பிரச்னைகள் நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு 177.25 டிஎம்சிஆக குறைக்கப்பட்டது. அதோடு காவரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு பிடி கொடுக்காமல் இருக்கிறது. கர்நாடக அரசும் தண்ணீர் திறக்க மாட்டோம் என பிடிவாதம் பிடிக்கிறது.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது டுவிட்டரிலும் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், "மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.