வித்யாசாகருக்கு வாழ்த்து சொன்ன அஷ்வின் ரவிச்சந்திரன் | வாணி ஜெயராமுக்கு சக்தி விருது | கார்த்தியும், கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைகிறார்கள் | கட்சிக்கு பெண்களை திரட்டும் கமல் | ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைப்பு | 24 மணி நேரமாகியும் மெர்சல்-ஐ நெருங்க முடியாத காலா | மோகன்லாலின் 'நீராளி' டிரைலர் மார்ச்-7ல் வெளியீடு | கேரளாவில் இன்று தியேட்டர்கள் வேலைநிறுத்தம்..! | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த ஆசிப் அலி - மம்தா | ரஜினி படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி |
தீரன் கார்த்தியும், நவரச நாயகன் கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். கார்த்தியின் 17வது படம் இது. இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத்தி சிங், மீண்டும் இணைகிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ரஜத் ரவிசங்கர் என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர், எங்கேயும் எப்போதும் சரவணன், ஆர்.கண்ணன், ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார், ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சிங்கம் 2, மோகினி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண்குமார், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் வருகிற 8ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஐதராபாத், மும்பை மற்றும் இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் 15 நாள் படப்பிடிப்பு நடக்கிறது. கார்த்தி படங்களில் இது பெரிய பட்ஜெட் படம் என்கிறார்கள்.