பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியாகி, டிரண்ட்டாகி வருகிறது. இந்த டீசரில் திருநெல்வேலி தமிழில் ரஜினி பேசும், வசனங்கள் பிரபலமாகி உள்ளன.
கியாரே செட்டிங்கா, வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே. இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்க பார்த்ததில்லல்ல, பார்ப்பீங்க. என்று இரண்டு பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் ரஜினி. இந்த இரண்டுமே அரசியல் கட்சிகளுக்கு அவர் மறைமுகமாக சவால் விடுவது போல அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குறிப்பிடுகின்றனர்.
ரஜினி, அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அதை காலா பஞ்ச் டயலாக்குடன் இணைத்து வேங்க மகன் ஒத்தையிலெ நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே என அரசியல் சாயம் பூசி வருகிறார்கள் ரசிகர்கள்.
டோசர் வெளியீடு என்பது சமீபகால சினிமா வெளியீட்டுக்கு முன்பான தேவையே இல்லாத தம்பட்டம்.. இத்தனை பேர் பாத்தாங்க.. அத்தனை பேர் பார்த்தாங்க.. அந்த படத்தோட டோசரை தாண்டிடுச்சு.. இந்த டோசருக்கு முன்னால் ஊத்திக்கிச்சு.. என்றெல்லாம் குறிப்பிட்ட வெளியீட்டை கணக்கீடு செய்வதே கேவலம்.. பார்த்தோரெல்லாம் ரசிப்பதற்காகவோ விருப்பத்திற்காகவோ பார்ப்பவர்கள் கிடையாது.. விமர்சனம் செய்வதற்காகவோ அல்லது போற போக்கில் பார்த்துவிட்டு, போகிறவர்களும் இருப்பார்கள்.. தெரியாமல் க்ளிக் செய்பவர்களும் இருப்பார்கள்.. அல்லது ஏதோ ஒன்றை பார்த்துவிட்டு, அதுசம்பந்தப்பட்ட வாக்கு பகுதியில் 'கருத்து கூற விரும்பவில்லை' என்பதை க்ளிக் செய்பவர்களாகவும் இருக்கலாம்.. மொத்தத்தில் அத்தனை பேர் பார்த்தார்கள் இத்தனை பேர் பார்த்தார்கள் என்ற வெட்டி பந்தாவெல்லாமே வேஸ்ட் தான்..
நீங்க உங்க டோசறை நீங்களே குறித்த நேரத்தில் வெளியிட்டிருந்தால் ஜெயேந்திரர் தேடலுக்கு முன்னால் தோற்றுப்போகும் அல்லது ஈக்வல் ஸ்டேட்டஸ் வந்துவிடும் என்ற பயத்தில் வெளியிடாமல் இருந்துவிட்டு, ஏதோ உத்தமர்கள் போல காரணம் கூறுவது 'கேக்கறவன் கேனையனா இருந்தா.. கேன்சருக்கு மருந்து கேசரி' என்பதுபோல உள்ளது.. அடடா வலிக்காதமாதிரியே என்னமா நடிக்கிறாங்க..
என்னதான் கதை பின்னணி இருந்தாலும் உன்னோட ரவுடித்தனம் கேவலமா இருக்கு.. உன்னோட கண்மூடித்தனமான ரசிகர்கள் நீ தம் அடிக்கறத பைத்தியக்காரத்தனமான ரசிக்கறாங்கன்னுதானே உன்னோட கீழ்த்தரமான சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை படத்துக்குப்படம் செய்து கல்லா கட்டிவந்து குதூகலித்தாய்.. அப்புறம் இப்போ காலம் போன காலத்துல கட்சி ஆரம்பிக்கறேன்னு புதுசா ஒரு புருடா உட்டு, 'ரசிகர்கள் சிகரெட் குடிக்க வேண்டாம்'னு வேதாந்தம் பேசுற.. அப்புறம் ரவுடித்தனம் வேணாம்னு எப்ப பேசற காலம் வரப்போகுதோ..? உன்னோட உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, சிகரெட் பற்றிய ஞானோதயம் வந்தா மாதிரி, ஏதாவது சில ரவுடிகளால் உன்னோட குடும்பம் பாதிக்கப்படும்போதுதான் அதை செய்வியோ..? பணம் சம்பாதிக்கறதுக்காக முட்டாள்த்தனமான ரசிகர்களை வைத்து என்னே கேடுகெட்ட செயலடா..?