மோகன்லாலின் 'நீராளி' டிரைலர் மார்ச்-7ல் வெளியீடு | கேரளாவில் இன்று தியேட்டர்கள் வேலைநிறுத்தம்..! | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த ஆசிப் அலி - மம்தா | ரஜினி படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி | மார்ச் 29 தேதியை மனதில் வைத்து இரும்புத்திரை | கோபி நயினார் படத்தில் மாற்றம் | 'கபாலி' தோல்வி, தெலுங்கில் விலை போகாத 'காலா' | ரஜினி, குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டம் | அனிருத்துக்கு வாழ்த்து சொல்லாத தனுஷ் | 10 வயது குறைவானவரை மணக்கிறாரா ஸ்ரேயா? |
ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'கபாலி'. 2016ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் சுமார் 300 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், படத்தை வாங்கிய பலருக்கும் தமிழ்நாட்டிலேயே நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை வெளியில் தெரியாமலேயே படத்தின் தயாரிப்பாளரான தாணு சரி செய்துவிட்டார் என்றார்கள்.
தெலுங்கில் சுமார் 30 கோடி வரை விற்கப்பட்ட 'கபாலி' படம் அங்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் படம் சரியாகப் போகவில்லை.
முதலில், '2.0' படம் வெளிவரும், அது வந்து வெற்றி பெற்ற பின் 'காலா' படத்தை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்பதுதான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷின் திட்டமாக இருந்தது. ஆனால், '2.0' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தாமதம் ஆனதால், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே 'காலா' படத்தை வாங்கிவிட்டது.
தமிழில் வியாபார ரீதியாக படத்திற்கு எந்தப் பிரச்சனையும் வரப் போவதில்லை. அதே சமயம், தெலுங்கில் 'காலா' படத்தின் உரிமையை 'கபாலி' விலையை விட 5 கோடி அதிகமாகச் சொல்கிறார்களாம். அவ்வளவு விலை கொடுத்து தெலுங்கில் யாரும் வாங்கத் தயாராக இல்லையாம். ஆனால், அந்த விலைக்குக் குறைவாகப் படத்தை கொடுப்பதாக இல்லை என்கிறார்கள்.
இதனால், கேட்ட விலை கிடைக்கவில்லை என்றால் படத்தை தெலுங்கில் சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தின் டீசர் வெளிவந்த பிறகு பிசினஸ் நடந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தெலுங்கிலும் இன்று வெளியான 'காலா' டீசர் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கு மீடியாக்களில் 'காலா' டீசர் பார்ப்பதற்கு 'கபாலி' படம் போலவே உள்ளதாக விமர்சித்து வருகிறார்கள்.