நடிகர் ரஜினி நடித்துள்ள காலா பட டீசர் இன்று வெளியானது. மார்ச் 1-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று ( மார்ச்,2) வெளியானது. படத்தின் தயாரிப்பாரான நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டார். கபாலி படத்தினை இயக்கிய ப.ரஞ்சித் இயக்கிய தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, வத்திக்குச்சி திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். காலா படம் ஏப். 27-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. காலா டீசர் வெளியான சற்று நேரத்தில் பல்லாயிரம் பேர் டீசர் பார்த்துள்ளனர்.
டீசர் அருமை. சமீபத்து நிகழ்வுகளுக்கு பதிலாகத்தான் உள்ளது... நேர்மையானவர் திரையில் ரௌடியாக நடிப்பது அவர் தொழில் ரஜினி அதிரடி காட்ட வேண்டும் என்றுதான் அவர் ரசிகர்கள் விரும்புகிறார்கள் ஆனால் உண்மையில் எல்லா அரசியல் தலைவர்களோடு அனுசரித்து செல்லவே விரும்புகிறார் அரசியல் நாகரிகத்தை கொண்டு வர விரும்புகிறார் ஆனால் அவருக்கு நேர்மாறாக தமிழகம் உள்ளது கமலிடம் வேகம் இருக்கிறது ரஜினியிடம் விவேகம் இருக்கிறது இருவரும் வெவ்வேறு துருவமாக உள்ளனர் ரஜினி எந்த அரசியல் பின்புலனோடு இல்லாமல் அவர் தனி வழியாக இருக்க வேண்டும் மற்றபடி அவரை தூற்றுபவர்கள் நடிகன் நாடாளக்கூடாது என்று கூறுபவர்கள் எதோ ஒரு அரசியல் சார்பு உள்ளவர்கள் தான் தன் அபிமான கட்சிகளுக்கு தங்கள் தலைவர்களுக்கு மவுசு போய்விடுமே என்று, இருக்கும் கொள்ளையர்களுக்கே லஞ்சம் ஊழல் மத இன வெறி தூண்டுபவர்களுக்கே ஓட்டுக்களை போட சமூக விரோதிகள் போராடுகின்றனர். இப்போதைய சூழ்நிலையில் சாமானியன் கட்சி துவங்கி நாடாளமுடியுமா? மக்களிடம் பிரபலமாக முடியுமா? ரஜினியை தூற்றும் சீமான் திரைத்துறை சேர்ந்தவர்தானே... திரைத்துறைக்கு வரவில்லையென்றால் இவர் பேச்சை எவன் கேட்பான்? திரைத்துறையில் கொஞ்ச நாள் இருந்ததால்தான் இப்போது உள்ள சிறு கூட்டம் அவருக்கு கிடைத்திருக்கிறது... சீமான் பிறந்த 5 வயதிலே அவர் மழலை தமிழ் பேசும் முன்னே ரஜினி திரைத்துறைக்கு வந்து தமிழில் பக்கம் பக்கமாக பக்காவாக dialogs பேசியவர். தன் துறையில் சாதித்தவர் பெரும் பணம் உழைப்பிலே சம்பாதித்தவர் அரசியலில் வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை... அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொழிலதிபர்தான் இந்தியாவில் சாமானியன் அரசியலில் வரமுடியாது திரைத்துறையினர் வரக்கூடாது ஆனால் படிக்காதவன் கொள்ளையன் திருடன் கொலைகாரன் வரலாமா? ரிலையன்ஸ் அம்பானி அதானி வரலாமா? ஜனநாயகப்படி அவர்களும் வரமுடியும் மக்கள் நினைத்தால் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் அதை யாரும் தடுக்க முடியாது...