தாணு மீது சினிமா விநியோகஸ்தர் புகார் | 'காலா' டீசர் லீக்: திடீரென வெளியிட்ட தனுஷ் | சமூக வலைதளங்களால் வாழ்க்கை மாறவில்லை! | ஐதராபாதில் விஜய் சேதுபதி! | தாயின் ஆசையை நிறைவேற்றுவாரா? | சர்க்கரை, நிலவேம்பு இதில் எது இனிக்கும்? | வெளியானது ‛‛காலா டீசர்: | கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் |
பாலிவுட்டின்
ஏஞ்சலினா ஜோலி என புகழப்படுபவர், கத்ரீனா கைப். சல்மான் கானுடன் ஜோடி
சேர்ந்து, இவர் நடித்து, டிசம்பரில் வெளியான டைகர் ஜிந்தா ஹை படம், வசூலை
வாரி குவித்தது. இந்த பட அனுபவங்கள் குறித்தும், தன் எதிர்கால திட்டம்
குறித்தும், அவர் அளித்த பேட்டி:
சல்மான் கானுடன், மைனே பியார் க்யோன் கியா படத்திலிருந்து, பல படங்களில் இணைந்து நடித்து வருகிறீர்கள்; அந்த அனுபவம் பற்றி...
எங்கள்
ஜோடி பொருத்தம், ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. அதை வார்த்தைகளால்
வர்ணிப்பது, மிகவும் சிரமம். எங்களை பொறுத்தவரை, 12 ஆண்டுகளில், ஒருசில
குணாதிசயங்கள் மாறியுள்ளன; சில விஷயங்கள் மாறவில்லை.
டைகர் ஜிந்தா ஹை படத்தில் நடித்தது பற்றி...
படம்,
வசூலை குவிப்பது சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் நடித்தது, மிகவும்
மகிழ்ச்சியான, அனுபவம். இயக்குனர் அலி, ஹீரோ சல்மான் கான் உள்ளிட்ட,
படத்தில் பணியாற்றிய பலரும், எனக்கு நண்பர்கள் என்பதால், சிரமமான வேலையைக்
கூட, எளிமையாக செய்ய முடிந்தது.
இந்த படத்துக்காக, அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளீர்களே; படப்பிடிப்பின் போது,
சிரமமாக இருந்திருக்குமே?
ஆமாம்;
நான், ஆக் ஷன் நடிகை அல்ல. கராத்தே, குங்பூ போன்ற கலைகளை முறைப்படி
கற்றவளும் அல்ல. அதனால், படப்பிடிப்பின் போது, ரொம்ப சிரமப்பட்டேன். சண்டை
காட்சிகளுக்கு நம் உடல் அமைப்பு ஒத்துழைக்க வேண்டுமல்லவா... ஆனால், நடன
காட்சிகளில் நடிப்பது, ரொம்பவே எளிமையாக இருந்தது. ஆர்வத்துடன் நடித்தேன்.
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுகிறீர்கள் போலிருக்கிறதே?
அப்படியெல்லாம் எதுவுமில்லை. நேரம் கிடைக்கும் போது, என் புகைப்படங்கள், முக்கியமான விஷயங்களை பதிவிடுகிறேன். சமூக வலைதளங்கள், என் வாழ்க்கையை மாற்றவில்லை.
தினமும், ஏராளமான புகைப்படங்களை எடுக்கிறேன். அவற்றை ரசிகர்கள் பார்ப்பதற்காக, சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன்.
சல்மான், அமீர், ஷாரூக் என, 'கான்' நடிகர்கள் மூன்று பேருடனும் நடித்துள்ளீர்கள்;
அவர்களைப் பற்றி...
நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து, அந்த அனுபவங்களை திரைப்படத்தில் பிரதிபலிக்கும் குணம் உடையவர் சல்மான் கான்.அமீர் கானை பொறுத்தவரை, ஒரு கதையை எப்படி கூறினால், ரசிகர்களிடம் எடுபடும் என்ற வித்தையை நன்றாக கற்று வைத்துள்ளார். மிகச் சிறந்த நடிகர், இயக்குனரும் கூட.பாலிவுட்டின் ஆல்ரவுண்டர் என,
அவரை கூறலாம். ஷாரூக் கான், கடுமையாக, ஓய்வின்றி உழைக்க கூடியவர்.
வாழ்க்கையை நன்றாக புரிந்து வைத்திருப்பவர். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும்
என, விரும்புவார்.
ஷாரூக் கானுடன் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள், எந்த அளவில் உள்ளன?
இந்த
படத்தின் இயக்குனர், ஆனந்த் எல் ராய்; மிக சிறப்பாக பணியாற்றுபவர்.
படத்தின் முதல்கட்ட, 'ஷூட்டிங்' முடிந்து விட்டது. அடுத்த மாதம், இரண்டாம்
கட்ட, ஷூட்டிங் துவங்குகிறது.