ரஜினி, குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டம் | அனிருத்துக்கு வாழ்த்து சொல்லாத தனுஷ் | 10 வயது குறைவானவரை மணக்கிறாரா ஸ்ரேயா? | ரஜினியினால் பிரபுதேவாவிற்கு கிடைத்த உற்சாகம் | 'காலா' டீசர் எப்படி? - சிறப்பு விமர்சனம் | அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுகிறாரா காலா? | புதிய சாதனை படைத்த பாகுபலி 2 பாடல் | பிரித்து மேய்ந்து விட்டீர்கள் : சந்தோஷ் நாராயணன் | வழிக்கு வந்தார் வடிவேலு | தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கை மீறி வெளியானது தாராவி |
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றிப் படமானது. ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதையும் ஷங்கர் தயாரிக்கிறார், சிம்பு தேவன் இயக்குகிறார். படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு. அதில் 1.50 கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் 6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரண்மணை செட் போடப்பட்டது. இதில் சில நாட்கள் மட்டுமே வடிவேலு நடித்தார். அதன்பிறகு கதையில், அணியும் உடையில், உடன் நடிக்கும் நடிகர்கள் விஷயத்தில் வடிவேலு தலையிட்டதால் அவருக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வடிவேலு பல வாரங்களாக படப்பிடிப்புக்கு வரவில்லை. போடப்பட்ட செட் வீணாகிவிட்டது.
இது குறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு வடிவேலுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் முன்பணமாக பெற்ற 1.50 கோடி, செட் போட ஆன செலவு 6 கோடி, இரண்டுக்கும் வட்டி சேர்த்து வடிவேலு தயாரிப்பாளர் ஷங்கருக்கு 9 கோடி வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அவருக்கு ரெட் கார்டு போட தயரிப்பாளர் சங்கம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஒப்புக் கொண்டபடி படத்தில் நடித்துக் கொடுப்பதாக வடிவேலு தரப்பிலிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு தகவல் அனுப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், வடிவேலு நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.