ரஜினி, குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டம் | அனிருத்துக்கு வாழ்த்து சொல்லாத தனுஷ் | 10 வயது குறைவானவரை மணக்கிறாரா ஸ்ரேயா? | ரஜினியினால் பிரபுதேவாவிற்கு கிடைத்த உற்சாகம் | 'காலா' டீசர் எப்படி? - சிறப்பு விமர்சனம் | அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுகிறாரா காலா? | புதிய சாதனை படைத்த பாகுபலி 2 பாடல் | பிரித்து மேய்ந்து விட்டீர்கள் : சந்தோஷ் நாராயணன் | வழிக்கு வந்தார் வடிவேலு | தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கை மீறி வெளியானது தாராவி |
கியூப் கட்டண உயர்வை கண்டித்து நேற்று முதல் புதிய படங்கள் எதுவும் வெளிவராவது என்ற தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதோடு இந்த முடிவை மீறி நடக்கும் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வெளிவருவதாக இருந்த பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டது. அதையும் மீறி இயக்குனர் பவித்ரன் இயக்கி, தயாரித்துள்ள தாராவி படம் இன்று வெளியாகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பவித்ரன் மகன் அபய் இசை அமைத்துள்ளார், மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தை மீறி படம் வெளியிட்டது குறித்து பவித்ரன் கூறியிருப்பதாவது: தாராவி படத்தை மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தயாரித்துள்ளேன். பட வெளியீட்டு தேதி முன்பே தீர்மானிக்கப்பட்டது. இன்று வெளிவராவிட்டால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். இந்த மாத இறுதியில் பெரிய படங்கள் வெளிவருகிறது. அதோடு என்னால் போட்டி போட முடியாது. அதனால் இப்போது வெளியிடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பட வெளியீட்டுக்கு உதவுவோம், துணையா இருப்போம் என்ற எந்த உத்தரவாதத்தையும் தயாரிப்பாளர் சங்கம் தரவில்லை. என்கிறார் பவித்ரன்.