மோகன்லாலின் 'நீராளி' டிரைலர் மார்ச்-7ல் வெளியீடு | கேரளாவில் இன்று தியேட்டர்கள் வேலைநிறுத்தம்..! | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த ஆசிப் அலி - மம்தா | ரஜினி படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி | மார்ச் 29 தேதியை மனதில் வைத்து இரும்புத்திரை | கோபி நயினார் படத்தில் மாற்றம் | 'கபாலி' தோல்வி, தெலுங்கில் விலை போகாத 'காலா' | ரஜினி, குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டம் | அனிருத்துக்கு வாழ்த்து சொல்லாத தனுஷ் | 10 வயது குறைவானவரை மணக்கிறாரா ஸ்ரேயா? |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'காலா' பட டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து சில தினங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இப்படம் பற்றிய புதிய புதிய தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ரஜினி உடன் கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது!
இந்த படம் குறித்து இப்போது வெளியான புதிய தகவல்...
இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார். ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜுடன் ' பீட்சா'', 'இறைவி' முதலான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் விஜய்சேதுபதி.
ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது. இது குறித்த எந்த அதிகார்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதி என்கின்றனர்.