வெளியானது ‛‛காலா' டீசர்: | கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் | நீ இல்லாத வாழ்க்கை எப்படி? - போனி கபூர் உருக்கம் | விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர் | விஜய் சேதுபதி பாடகர் அவதாரம் | சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் | வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு |
தெலுங்கில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. சூப்பர் ஹிட்டான அப்படத்தை தற்போது வர்மா என்ற பெயரில் டைரக்டர் பாலா தமிழில் ரீமேக் செய்கிறார். சீயான் விக்ரமின் மகன் துருவ், நாயகாக அறிமுகமாகிறார்.
நாச்சியார் படத்தை பாலா இயக்கி வந்தபோதே, இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், மகன் துருவிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வந்தார் விக்ரம். அதோடு, அவரது கெட்டப்பையும் தாடி வைத்து மாற்றியிருப்பதோடு, கடின உடற்பயிற்சி மூலம் பாடி லாங்குவேஜையும் மாற்றி விட்டார் விக்ரம். இதற்காக ஒரு பாடி பிட்னஸ் கலைஞரை நியமித்திருந்தார்.
இந்த நிலையில், மார்ச் 2-ந் தேதியான நாளை முதல் வர்மா படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்குகிறது. சேது படம் மூலம் தனது சினிமா கேரியரையே மாற்றிய டைரக்டர் பாலா, இந்த வர்மா படத்தின் மூலம் தனது மகனுக்கு திரையுலகில் பெரிய திருப்புமுனையாக ஏற்படுத்துவார் என்று பெரிதாக எதிர்பார்க்கிறார் விக்ரம்.