கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் | நீ இல்லாத வாழ்க்கை எப்படி? - போனி கபூர் உருக்கம் | விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர் | விஜய் சேதுபதி பாடகர் அவதாரம் | சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் | வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் |
மீன்குழம்பும் மண்பானையும் படத்தைத் தொடர்ந்து சிவாஜி பேரனும், ராம்குமார் மகனுமான துஷ்யந்த் மற்றும் அபிராமி துஷ்யந்த் தயாரிக்கும் படம் ஜெகஜால கில்லாடி. விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ், ராதாரவி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி, நளினி, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், எழில் இயக்குகிறார்.
ஒரு காலத்தில் காதல், செண்டிமெண்ட் படங்களை இயக்கிய எழில் இப்போது காமெடி படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார். மனம் கொத்தி பறவையில் தொடங்கி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வரைக்கும் மினிமம் கியாரண்டி காமெடி படங்களை இயக்கி வருகிறார். மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இதுவும் கிராமத்து பின்னணி கொண்ட காமெடி கதை. இதன் படப்பிடிப்புகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.