உடல்நலமின்றி இருந்தார் : ஸ்ரீதேவியின் தோழி தகவல் | ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறார் மம்முட்டி | 'காளியன்' மூலம் மலையாளத்தில் நுழைந்த ஷங்கர்-எசன்-லாய்..! | பிஜூமேனன் ஜோடியாக நடிக்கும் பார்வதி | பூஜையுடன் துவங்கியது 'ஆடுஜீவிதம்' | அனிருத்துக்கு கை கொடுத்த ரஜினிகாந்த் | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2', ஆரம்பம் | 21 ஆண்டுகளைக் கடந்த யுவன்ஷங்கர் ராஜா | மதுவிலக்கு - பெண்கள் ஓட்டுக்காக பூச்சாண்டி காட்டாதீர்கள் : கமல் | ரஜினி படத்திற்கு அனிருத் இசை |
இசையமைப்பாளர் அனிருத் இளம் வயதிலேயே ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். 21 வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு அனிருத்துக்குக் கிடைத்திருப்பதில் பெரிய ஆச்சரியம் தேவையில்லை. ரஜினிகாந்தின் உறவினர் அனிருத் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
கடந்த சில வருடங்களாகவே அனிருத், தனுஷ் ஆகிய இருவருக்கும் இடையில் நல்லுறவு இல்லை. அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான். ஆனால், அனிருத் தனுஷின் எதிரிகளான சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோருடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது தனுஷுக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.
அதனால்தான் அவர் தயாரிக்கும் படங்களுக்கும், இயக்கிய படத்திற்கும் அனிருத்தை இசையமைக்க வைக்கவில்லை. 'காலா' படத்திலேயே அனிருத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் அந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவில்லை. ஆனால், தனுஷ் தொடர்ந்து அனிருத்தை ஓரம் கட்டி வைத்ததால் ரஜினிகாந்த் அவருடைய அடுத்த படத்தில் அனிருத்துக்குக் கை கொடுத்து உதவியிருக்கிறார்.
'விசுவாசம், மாரி 2' ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால், அது நடக்கவில்லை. இப்போது அந்தப் படங்களை விட ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அவர் பெற்றுவிட்டார்.