இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் | காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றாதீர்கள் : கமல் | உடல்நலமின்றி இருந்தார் : ஸ்ரீதேவியின் தோழி தகவல் | ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறார் மம்முட்டி | 'காளியன்' மூலம் மலையாளத்தில் நுழைந்த ஷங்கர்-எசன்-லாய்..! | பிஜூமேனன் ஜோடியாக நடிக்கும் பார்வதி | பூஜையுடன் துவங்கியது 'ஆடுஜீவிதம்' | அனிருத்துக்கு கை கொடுத்த ரஜினிகாந்த் | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2', ஆரம்பம் |
ஆர்யா நடித்த கலாபக் காதலன் மற்றும் வந்தாமலை போன்ற படங்களை இயக்கியவர் இகோர். தற்போது, இவர் பாரதி வண்ணக்கிளி என்ற படத்தை இயக்கி வருகிறார். சொப்பன் பிரதான் என்ற பெங்காலி நடிகர் நாயகனாக நடிக்க, நாயகியாக கமரக்கட்டு மனீஷாஜித் நடிக்கிறார். ஏ.வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் கிராமத்து கதையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இகோர், ஜாதிப்பிரச்னையை கையிலெடுத்திருந்தாலும் அதை வித்தியாசமாக சமூகத்திற்கு நல்ல செய்தியை கொடுக்கும் விதமாக படமாக்கி உள்ளாராம். மே மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் ஆடியோ விழா மார்ச் 25-ந்தேதி நடைபெற உள்ளது.