வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் | காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றாதீர்கள் : கமல் | உடல்நலமின்றி இருந்தார் : ஸ்ரீதேவியின் தோழி தகவல் | ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறார் மம்முட்டி | 'காளியன்' மூலம் மலையாளத்தில் நுழைந்த ஷங்கர்-எசன்-லாய்..! | பிஜூமேனன் ஜோடியாக நடிக்கும் பார்வதி | பூஜையுடன் துவங்கியது 'ஆடுஜீவிதம்' | அனிருத்துக்கு கை கொடுத்த ரஜினிகாந்த் |
தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாகவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கான தண்ணீரை 177.25 டிஎம்சி-ஆக குறைத்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் ஆகும் என்றார். இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்த இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
காவிரி படுகையை ஒரு எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக பேசுவது ஏற்புடையதல்ல. சட்டத்தின் ஆட்சியை நடத்த அரசு தவறுகின்ற போதெல்லாம் நீதி மன்றத்தை நாடுகிறோம். ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்பையும் அரசு செயல்படுத்த மறுத்தால் நீதி கேட்டு எங்கே செல்வது?, யாரிடம் முறையிடுவது? என தோன்றினால் அது குடியரசுக்கும், நீதிமன்றத்திற்கும் பெருமை சேர்க்காது.
எனவே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை மதித்து, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை 6 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.