கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் | நீ இல்லாத வாழ்க்கை எப்படி? - போனி கபூர் உருக்கம் | விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர் | விஜய் சேதுபதி பாடகர் அவதாரம் | சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் | வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் |
சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சில ஆண்டுகளாக படங்களில் அவ்வளவாக கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்தநிலை மாறி தற்போது பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சுமார் 10 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உறவினரான ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் 'பேய் பசி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்குகிறார்.
இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். விஜய்சேதுபதி சினிமாவுக்காக ஒரு முழு பாடலை பாடுவது இதுவே முதல் முறை.
பேய்பசி படத்தின் மூலம் பாடகராகி இருக்கும் விஜய்சேதுபதி, தொடர்ந்து படங்களில் பாடல்களை பாட அழைப்பு வந்தால் பாடுவதற்கு தயாராக இருக்கிறாராம்.