காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுகாஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்தார்.இரு மாதங்களுக்கு முன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மடத்திற்கு திரும்பினார். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. சங்கர மடத்தில் இருந்த அவருக்கு நேற்று காலை 7:30 மணிக்கு
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உதவி யாளர்கள் அவரை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அருகே
உள்ள, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 8:50
மணிக்கு மருத்துவமனையிலேயே முக்தியடைந்தார். அவரது உடல்மருத்துவமனை யிலிருந்து சங்கர மடத்திற்கு எடுத்து வரப்பட்டது.
அதன் பின் மடத்தில் அவர் வழக்கமாக அமரும் அறையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்
அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் கைகளை துாக்கி ஆசிர்வதிப்பது போல,
அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதிய படி இருந்தனர்.'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்'
அருகிலேயே, ஜெயேந்திரரும், இன்று காலை, 9:00 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் மறைவு செய்தி அறிந்ததும் காஞ்சி மடத்தின் பக்தர்களும் உள்ளூர் மக்களும் மடத்தில் குவிந்தனர். ஏராளமான போலீசாருடன், மடத்தின் ஊழியர்களும், கூட்டத்தை கட்டுப்படுத்தி, இரங்கல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தினர்.மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் போன்றோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11+ 109)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply