கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் | நீ இல்லாத வாழ்க்கை எப்படி? - போனி கபூர் உருக்கம் | விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர் | விஜய் சேதுபதி பாடகர் அவதாரம் | சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் | வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் |
ரஜினி நடிக்கும் காலா படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள படத்தை, தனுஷ் தயாரித்துள்ளார். படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரர் சுவாமியின் மறைவால் டீஸர் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காலா படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அப்படம் பற்றிய புதிய தகவல்கள் வருமாறு:
காலா மும்பை கேங்ஸ்டர் பற்றிய கதை அல்ல. மும்பை தாராவி பகுதி மக்களின் காட்பாதராக இருந்த சராசரி மனிதனின் கதை.
படத்தில் ரஜினியின் மனைவி ஈஸ்வரி ராவ். நான்கு மகன்கள், பேரன் பேத்திகள், நண்பர்கள் என சென்ட்டிமென்ட் நிறைந்தவர் காலா. ஆனால் எதிரிக்கு முன்னால் கனலாய் நிற்பார் காலா.
கரிகாலன் என்பது ரஜினியின் பெயர். இதில் காலன் என்பதை சுருக்கி காலா என்று டைட்டில் வைத்துள்ளனர். ரஜினி திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அங்கு காலா என்ற கிராமத்து தெய்வம் அவரது குல தெய்வம். காலா என்றால் ஹிந்தியில் கருப்பு. இந்த நிறம் படத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. ரஜினி கருப்பு உடைகளையே அணிந்திருப்பார். படத்தில் வரும் கேரக்டர்கள் ரஜினியை காலாசேட் என்று அழைப்பார்கள்.
காலா கேரக்டரின் இன்ஸ்பிரேஷன் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பஞ்சாட்சரம். அவர் தன் கிராமத்தின் உரிமைகளுக்காக போராடியவர்.
காலாவுக்கு வில்லன் நானா படேகர், மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். ரஜினியின் நண்பர் வாலியப்பனாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். அஞ்சலி பாட்டீல், சம்பத், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, வத்திக்குச்சி திலீபன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹூமா குரேஷி, ரஜினியை ஒரு தலையாய் காதலிக்கும் ஹிந்திக்கார இளம்பெண்ணாக நடித்திருக்கிறார்.
மும்பை தாராவி தான் காலாவின் கதை களம். அங்கு பல மொழி பேசும் மக்கள் இருப்பதால் தமிழ், மலையாளம், இந்தி, குஜராத்தி, ஒரியா என பல மொழி வசனங்கள் இருக்கும்.
தாராவியில் 15நாள் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி 4 நாட்கள் நடித்தார். அதன் பிறகு 25 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தாராவி செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்தது.
முள்ளும் மலரும், எங்கேயே கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை படங்களின் வரிசையில் ரஜினியின் இயல்பான நடிப்பை கொண்ட படமாக காலா உருவாகியிருக்கிறது.