இந்தியாவிலே முதல்முறை : கேரளாவுக்கு கமல் பாராட்டு | அமலாபால் கண்தானம் | தனஞ்செயன் தயாரிப்பில் துமாரி சுலு தமிழ் ரீ-மேக் | காற்றில் கலந்த மயிலு - ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம் | கஸ்தூரி வக்கிரம் | நாளை முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை | வேதனையில் வாழ்ந்த ஸ்ரீதேவி : ராம்கோபால் வர்மா | அஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ஸ்ருதி | 25வது நாளில் 'ஹே ஜூடு' : த்ரிஷா மகிழ்ச்சி | பிருத்விராஜின் 'காளியன்' : முக்கிய வேடத்தில் சத்யராஜ்..! |
நடிகை ஸ்ரீதேவியின் மிகத் தீவிரமான ரசிகர் ராம்கோபால் வர்மா. ஸ்ரீதேவி மறைந்த நாளிலிருந்தே தொடர்ந்து டிவீட்டுகளைப் பதிவிட்டு அவருடைய வருத்தத்தைத் தெரிவித்து வந்தார். நேற்று ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கென உருக்கமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.
அதில், “சில பெயர்களை இதில் குறிப்பிட்டிருப்பதால் இதை வெளியிடலாமா என எனக்குள்ளேயே விவாதித்தேன். இருந்தாலும் ஸ்ரீதேவி மற்றவர்களை விட அவருடைய ரசிகர்களுக்குச் சொந்தமானவர், அதனால் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளத் தகுதியுடையவர்கள்.
ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என்னுடைய காதல் கடிதம் - ராம்கோபால் வர்மா
“பல லட்சம் மக்கள் போலவே, மிக அழகான பெண் ஸ்ரீதேவி என நம்புகிறவன் நான். 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகத்தை ஆட்டிப் படைத்தவர். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு பெரும்பாலானோர் RIP என்பதுடன் அவர்களது நினைவுகளை முடித்துக் கொள்வார்கள். ஆனால், எனக்கு அப்படியில்லை.
அவருடன் க்ஷன ஷனம், கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களில் நெருக்கமாகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. வெளி உலகத்தில் ஒரு பிரபலத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அதற்கு நேர்மாறாக அவருடைய நிஜ வாழ்க்கை இருந்தது. பலருக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை நேர்த்தியாக இருந்ததாகவே தெரிந்தது. ஆனால், அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாரா ?.
அவரைச் சந்தித்ததில் இருந்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி நான் அறிவேன். அவருடைய அப்பா மறையும் வரை அவர் வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவையாக இருந்ததை எனது கண்களால் பார்த்திருக்கிறேன். அதன் பின் மிகவும் கட்டுப்பாடான அம்மாவால் அவர் கூண்டுக்குள் அடைபட்ட பறவை ஆனார்.
அந்தக் காலத்தில் நடிகர்கள், நடிகைகளுக்கு கருப்புப் பணம்தான் சம்பளமாக வழங்கப்படும். ஆனால், அவரது அப்பா மறைந்த பின் அவருடைய அப்பா நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள், உறவினர்களால் ஸ்ரீதேவி ஏமாற்றப்பட்டார். மேலும் பொறுப்பற்ற அம்மாவால் அவர் தவறான பிரச்சனைக்குரிய சொத்துக்களை வாங்கி ஏமாற்றப்பட்டார்கள். போனி கபூர் அவருடைய வாழ்க்கையில் நுழையும் சமயத்தில் ஸ்ரீதேவி பணமே இல்லாத ஒரு நடிகையாக இருந்தார்.
போனியும் அப்போது கடனாளியாக இருந்தார், அதனால் ஸ்ரீதேவியின் அழுகைக்கு அவரால் தோள் கொடுக்க முடிந்தது. தவறான அறுவை சிகிச்சையால் ஸ்ரீதேவியின் அம்மா அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா, பக்கத்து வீட்டுக்காரரின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீதேவியின் அம்மா அனைத்து சொத்துக்களையும் ஸ்ரீதேவியின் பெயரில் எழுதிவிட்டார். இதனால், ஸ்ரீலதா அவருடைய அம்மா சுயநினைவில்லாமல் ஸ்ரீதேவியின் பெயரில் அனைத்து சொத்துக்களையும் எழுதிவிட்டார் என வழக்கு தொடர்ந்தார். அதனால் போனியைத் தவிர அவருக்கு வேறு எந்த ஆதரவும் இந்த உலகத்தில் இல்லாமல் இருநதது.
போனியின் அம்மா, ஸ்ரீதேவிதான் அவர்களது குடும்பத்தைப் பிரித்தார் என்று குற்றம் சாட்டி, ஸ்ரீதேவியை பொதுவெளியில் நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறையில் வயிற்றில் குத்தினார். மீண்டும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடிக்க வரும் வரை மகிழ்ச்சியற்ற பெண்ணாகவே இருந்தார். எதிர்கால பயம், மோசமான திருப்பங்கள் அவருடைய வாழ்க்கையில் அவருடைய அமைதியைக் குலைத்தது.
மிகவும் அழகான பெண்ணாகவே பலருக்கு ஸ்ரீதேவி இருந்தார். அவருக்குள்ளும் அது இருந்தது. மற்றவர்களைப் போலவே வயது அவருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. அவர் செய்து கொண்ட சில அறுவை சிகிச்சைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். அவர் தொடர்ந்து மற்றவர்களால் தான் வழி நடத்தப்பட்டு வந்தார். பெற்றோர்கள், உறவினர்கள், கணவர், குழந்தைகள் என அது தொடர்ந்தது.
உண்மையில் ஒரு பெண்ணின் உடலுக்குள் இருந்த குழந்தை தான் ஸ்ரீதேவி. பொதுவாக யார் இறந்தாலும் நான் ரெஸ்ட் இன் பீஸ் என சொல்ல மாட்டேன். ஆனால், ஸ்ரீதேவியியைப் பொறுத்தவரையில் அதை நான் சொல்ல விருப்பப்பட்டேன். கடைசியாக அவருடைய மரணத்தால், உண்மையிலேயே அவருக்கு அவருடைய வாழ்க்கையில் ஒரு அமைதி கிடைக்கட்டும் என நம்பினேன்.
என்னுடைய சொந்த அனுபவத்தில், ஆக்ஷ்ன், கட் என காமிராவுக்கு முன்னால் மட்டும் அவரை அமைதியாகப் பார்த்தேன். அவருடைய நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டித்து அவருடைய கற்பனை உலகிற்கு வந்துவிடுவார். அவருக்கு வலியைக் கொடுத்த வாழ்க்கையிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்று விட்டார். அதனால்தான் அவர் இனி அமைதியாக இருப்பார் என்கிறேன்.
RIP ஸ்ரீதேவி, ஆனால், இதைச் செய்வதற்காக இந்த உலகம் அமைதியாக இருக்காது என்று உறுதியளிக்கிறேன்.
நாங்கள் ரசிகர்கள், நெருங்கியவர்கள் உங்களை அதிகமாக சோர்வடைய வைத்திருக்கிறோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தீர்கள். இது சரியானது இல்லை தான், ஆனால், எது செய்தாலும் அது தாமதமானது தான்.
நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான பறவையாக உண்மையான அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் உங்கள் கண்களில் கண்டு பறந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்ததில்லை. ஆனால், இப்போது அதை நம்புகிறேன். ஏனென்றால் அடுத்த பிறவியில் உங்களை நாங்கள் காண வேண்டும். அப்போது நாங்கள் திருத்தங்களைச் செய்து எங்களைத் தகுதியுள்ளகளாக மாற்றி உங்களுக்கு மரியாதை அளிக்கிறோம்.
தயவு செய்து ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், ஏனென்றால் நாங்கள் உங்களை உண்மையாக நேசிக்கிறோம். இது போல் இன்னும் தொடர ஆசைதான், ஆனால், கண்களில் வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
- ஆர்ஜிவி