புதுடில்லி:பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற, பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி, சி.பி.ஐ., விசாரணைக்காக, இந்தியா வர மறுத்துவிட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வந்த, பிரபல தொழில் அதிபர், நிரவ் மோடி,
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 12 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வட அமெரிக்காவை ஒட்டிய, மெக்சிகோ வளைகுடாவில் உள்ள, கரீபியன் தீவு
களில் தங்கியுள்ள நிரவ் மோடியை, வழக்கு விசாரணைக்கு வருமாறு, சி.பி.ஐ.,அதிகாரிகள், இ - மெயிலில் கடிதம் அனுப்பினர்.
அதற்கு, 'எனக்கு, தொழில் ரீதியான பணிகள் உள்ளதால், விசாரணைக்கு இந்தியா வர முடியாது' என, நிரவ் மோடி, இ - மெயிலில் பதில் அளித்து உள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
எனினும், அவரை, இந்தியா வரவழைத்து, விசாரணை நடத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1)
Reply