அஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ஸ்ருதி | 25வது நாளில் 'ஹே ஜூடு' : த்ரிஷா மகிழ்ச்சி | பிருத்விராஜின் 'காளியன்' : முக்கிய வேடத்தில் சத்யராஜ்..! | மாமாங்கம் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு | 75வது நாளில் 'மாயநதி' : மோகன்லால் பாராட்டு..! | தெலுங்கில் வெளியாகும் மலையாள ஆனந்தம் | மொத்த திரையுலகமும் துயரம் : ஹேமமாலினி | பிரபாஸின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பா? | நாகார்ஜூனா நடிக்கும் ஆபீசர் | மார்ச் 5-ல் சூர்யா 36 பட பர்ஸ்ட் லுக் வெளியீடு |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளியான 'மாயநதி' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றது.. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்க, வளர்ந்துவரும் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார்.
காதல் கதைகளிலேயே இது புதுமாதிரியான திரைக்கதை பாணியில் சொல்லப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையுலகினர பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தப்படம் வெளியாகி 75வது நாளை தொட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் இந்தப்படத்திற்கு பாராட்டு பத்திரம் எழுதியுள்ளார்.
“சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். மனம் திறந்து சொல்ல வேண்டுமென்றால் உண்மைக்கு பக்கத்தில் இருந்து அழகாக நெய்யப்பட காதல் கதை தான் இந்த 'மாயநதி'. 75வது நாளை கொண்டாடும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.