காற்றில் கலந்த மயிலு - ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம் | கஸ்தூரி வக்கிரம் | நாளை முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை | வேதனையில் வாழ்ந்த ஸ்ரீதேவி : ராம்கோபால் வர்மா | அஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ஸ்ருதி | 25வது நாளில் 'ஹே ஜூடு' : த்ரிஷா மகிழ்ச்சி | பிருத்விராஜின் 'காளியன்' : முக்கிய வேடத்தில் சத்யராஜ்..! | மாமாங்கம் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு | 75வது நாளில் 'மாயநதி' : மோகன்லால் பாராட்டு..! | தெலுங்கில் வெளியாகும் மலையாள ஆனந்தம் |
'எனக்கு 20 உனக்கு 18' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து 'மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன்' உள்ளிட்ட பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் மட்டுமே தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஸ்ரேயா நடிகையாக அறிமுகமாகி சுமார் 17 வருடங்கள் ஆகிறது. அவருக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரி கோஸ்ச்சேவ் என்பவருக்கும் மார்ச் மாதம் 18ம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதயப்பூரில் திருமணம் நடைபெற உள்ளது.
மும்பையில் ஒரு பார்ட்டியில் சந்தித்துக் கொண்ட இருவரும் நண்பர்களாகி பின்னர் காதலர்களானார்கள். சமீபத்தில் ரஷ்யா சென்று தன் வருங்காலக் கணவர் குடும்பத்தினரையும் ஸ்ரேயா சந்தித்துவிட்டு வந்தார்.
உதய்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று நாட்கள் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. மார்ச் 17ம் தேதி சங்கீத், மெஹந்தியும், 18ம் தேதி இந்து முறைப்படி கல்யாணமும், 19ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.