சென்னை, ''மாநில அரசை பொறுத்தவரை, கவர்னர் தான் நிர்வாக தலைமை. நான், கையெழுத்து மட்டும் போடும், பொம்மை கவர்னராக இருக்க மாட்டேன்,'' என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின், தென்னக மைய விருது வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது:சமீபத்தில், தமிழகம் வந்த பிரதமர் மோடி, மாநிலத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். திட்டங்களுக்கு தேவையான, அனைத்து
உதவிகளையும் வழங்க, மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.தமிழகத்தில், கட்டுமானத் துறையினர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர்.
மக்களை நேரடியாக சந்தித்தேன்.
கட்டுமான திட்டங்கள், லே - அவுட்களுக்கு அனுமதி வழங்குவதில், முழுமையான வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடைமுறைகளை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றுவதும், ஒற்றை சாளர முறையிலான அனுமதி வழங்குவதுமே, ஊழலை ஒழிக்கும்.
இது குறித்து, முதல்வருடன் பேசி, நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டியநடவடிக்கைகளை விரைவுபடுத்த உள்ளேன். அதே நேரம், கட்டுமான நிறுவனங்களும்,முறையான வரியை, உரிய காலத்தில் செலுத்த வேண்டும்.நான் தமிழகத்துக்குவந்ததில் இருந்து, இதுவரை, 12
மாவட்டங்களுக்கு சென்று, பல்வேறு தரப்பு மக்களை நேரடியாக சந்தித்தேன்.
மாநில அரசை பொறுத்தவரை, கவர்னர் தான் நிர்வாக தலைமை. இதை, பெயரளவுக்கு பயன்படுத்தி, பொம்மை கவர்னராக என்னால் இருக்க முடியாது. கவர்னர் யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்; மக்களின் நிலை கவர்னருக்கு தெரிய வேண்டும். அப்போது தான், அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் சரியான பாதையில் செல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து