நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் அன்புச்செழியன் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்யாமல் இருக்க, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் தாக்கல் செய்தார். பின், மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, போலீசும் அவரை கைது செய்யும் முயற்சியை கைவிட்டது. பத்திரிகையாளர்கள் சிலர் போலீஸ் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, அவர், வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடி விட்டார்; அவரை தேடி வருகிறோம். விரைவில் அவரை கைது செய்வோம் என கூறினர்.
ஆனால், அன்புச்செழியன் மதுரையில் உள்ள தன் வீட்டில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம், அமைச்சர் செல்லூர் ராஜு பேரன்களுக்கு காதனி விழா நடந்தது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரோடு, அன்புச்செழியனும் கலந்து கொண்டார்.
இதை போலீஸ் உயரதிகாரிகள் பலரும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது, நேரிலேயே கண்டனர். இருந்தும், அன்புச்செழியனை கைது செய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக, எதிர்கட்சியினர், அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தும், அரசு தரப்பில் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 25-ல் மதுரையில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம், தெற்கு மாசி வீதியில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அவரோடு, பைனான்சியர் அன்புச் செழியனும் கலந்து கொண்டார். கூட்டம் முடியும் வரையில் இருந்து விட்டுத்தான் திரும்பினார்.
இப்போதும், அவரை ஏன் கைது செய்யவில்லை என பலரும் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புகின்றனர். இது தான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை காக்கும் லட்சணம் என பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால், அரசுத் தரப்பில் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக, அரசுக்கு எதிராக பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, அசோக்குமாரின் நண்பர், நடிகர் சசிகுமார் சினிமாக்காரர்களை திரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.