மதுரை மாநாடு : கமல் நன்றி | சாவித்ரியாக நடிக்க முழு தகுதி உள்ளது : கீர்த்தி சுரேஷ் | 'மெர்சல்' சாதனையை முறியடிக்குமா 'காலா' டீசர் | துபாய் போலீஸ் அனுமதி : ஸ்ரீதேவி உடல் இன்று இந்தியா வரும்? | சம்பளம் பாக்கி, ஆதாரம் உள்ளது : கவுதமி | தேவதர்ஷினி சேனல் மாறியது ஏன்? | மீண்டும் வி.சி.குகநாதன் | தெருக்கூத்து பின்னணியில் ஒரு திகில் படம் | கமல் மீது புகார் கொடுப்பாரா கவுதமி? | ஸ்ரீதேவியைப் பெருமைப்படுத்திய தமிழ் சினிமா |
கடந்த வாரம் வெளியான '6 அத்தியாயம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான 'சித்திரம் கொல்லுதடி' அத்தியாயத்தை இயக்கியுள்ள ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் 'என் பெயர் ஆனந்தன்'. காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் .
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'தாயம்' ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர், 'ஏமாலி', 'காதல் கண் கட்டுதே ' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறியதாவது:
முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளது. த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸ்க்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது என்றார் ஸ்ரீதர் வெங்கடேசன்.