ஒரு கோடி பேர் ரசித்த ரங்கஸ்தலம் பாடல் | அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் நானி படம் | கவுதமி விவகாரத்தை கம்பெனி பார்த்து கொள்ளும் : கமல் | அஜித் படத்தில் 3 காமெடியன்கள் : விசுவாசம் அப்டேட்! | பிளாஸ்பேக் : ரஜினிக்காக விரதம் இருந்த ஸ்ரீதேவி | சினிமா ஸ்டிரைக்கினால் கரு படத்துக்கு சிக்கல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால் | சீமான் - குஷ்புவை இணைத்த டிராபிக் ராமசாமி | மதுரை மாநாடு : கமல் நன்றி | சாவித்ரியாக நடிக்க முழு தகுதி உள்ளது : கீர்த்தி சுரேஷ் |
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, மகாநதி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்து வருகிறார். சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பழம்பெரும் நடிகை ஜமுனா, சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேசுக்கு தெலுங்கு மொழி தெரியாது. சாவித்ரியாக நடிக்க அவர் தகுதியானவர் அல்ல என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:
சாவித்ரியாக திடீரென்று நடிக்கவில்லை. நடிப்பது என்று முடிவான பிறகு அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். முதலில் அவரை பற்றி வந்திருக்கும் புத்தகங்களை படித்தேன். பிறகு சாவித்ரியின் மகள் சாமுண்டீஸ்வரியை சந்தித்து சாவித்ரியின் மேனரிசங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரும் எனக்கு நிறைய விஷயங்களை சொன்னார். சாவித்திரியின் படங்கள் நிறைய பார்த்தேன். அதன் பிறகு நடிக்க பயிற்சி எடுத்தேன். அது இயக்குனர் உள்ளிட்ட பலருக்கும் திருப்தி ஏற்பட்ட பிறகே நடிக்க ஆரம்பித்தேன்.
சாவித்திரி அம்மாவுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவர் கிரிக்கெட் விளையாட்டு, நீச்சல், கார் டிரைவிங் மூன்றிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். நானும் இந்த மூன்றிலும் ஆர்வம் மிக்கவள். படம் வெளிவந்த பிறகு என் நடிப்பு பற்றி விமர்சித்தால் நன்றாக இருக்கும். என்கிறார் கீர்த்தி சுரேஷ்.