நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
நீலப்படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், பாலிவுட்டில் பரவலாக நடித்து வருகிறார். முதன்முறையாக தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விசி வடிவுடையான் இயக்க, சரித்திர படமாக இந்தப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக வாள் வீச்சு, குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு தமிழும் பயின்று வருகிறார்.
ஹிந்தி படங்களில் நடிக்கும்போது அந்த படங்கள் குறித்த தகவல்களை சூசகமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சன்னி லியோன், இப்போது வீரமாதேவி படத்தையும் பரபரப்பாக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்.
அந்த வகையில், இந்த படத்தில் விரைவில் ஒரு திருமண காட்சியில் நடிக்க உள்ளார் அவர். அதையடுத்து ஏற்கனவே திருமணமாகியுள்ள எனக்கு இன்னொரு திருமணம் நடைபெற உள்ளது என்று ஒரு செய்தியை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்திருக்கிறார் சன்னிலியோன்.