நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
கடந்த சனிக்கிழமை நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்தார். முதலில் மாரடைப்பு காரணமாக இறந்தார் என கூறப்பட்டது. பின்னர் போதையில் குளியல் தொட்டில் விழுந்து இறந்தார் என அந்நாட்டு தடயவியல் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் அனுமதிச் சான்றை வழங்கியுள்ளனர். இதையடுத்து அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. இறப்புக்கான சான்று, எம்பாமிங் சான்று, பாஸ்போர்ட் ரத்து என அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10.30 - 11.00 மணியளவில் அவரது உடல் மும்பை வந்து சேருகிறது. நாளை காலை 9.30 மணி முதல் 12.30 வரை மும்பை செலிபிரசேன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. மாலை 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. மாலை 3.30 மணிக்கு மும்பை வில்லேபார்லே மயானத்தில் ஸ்ரீதேவியின் குடும்ப பாரம்பரியமுறைப்படி இறுதி சடங்கு நடைபெறுகிறது.