நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
தெலுங்கு சினிமாவில் யதார்த்த நாயகனாக வலம் வருபவர் நானி. இவர், பெரும்பாலும் மிடில் கிளாஸ் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதோடு, நானி நடித்த எட்டு படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் பெரிய அளவில் வசூலித்து வருகிறது. கடைசியாக நானியுடன் சாய் பல்லவி இணைந்து நடித்த எம்சிஏ படம் தெலுங்கில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கிருஷ்ணார்ஜூனா யுத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார் நானி. அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 12-ந்தேதி வெளியாகிறது. நானிக்கு கிடைத்து வரும் தொடர் வெற்றி காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதோடு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை மேக்னஸ் மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.